Free training of vermicompost production in the name of producing liquid-based natural fertilizers in Namakkal
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட தலைவர் டாக்டர் அகிலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 11ம் தேதி வியாழக் கிழமை காலை 9 மணிக்கு மண்புழு உரம் உற்பத்தி திரவவடிவ இயற்கை உரங்கள் தயாரிக்கும் முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இப்பயிற்சி முகாமில் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துகவம், இயற்கை வேளாண் முறைகள், இயற்கை உரங்களின் பங்கு, மண்புழுஉரம் உற்பத்தி முறைகள், மண்புழு குளியல் நீர் தயாரிக்கும் முறை மற்றும் திரவ வடிவ இயற்கை உரங்களான பஞ்சகாவ்யா, அமிர்த கரைசல், ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், பீஜாமிர்தம் மற்றும் இதர இயற்கை உரங்கள் தயாரிக்கும் முறைகள் மற்றும் விற்பனை வாய்ப்புகள் பற்றி விரிவாக பயிற்சி அளிக்கப்படும்.
இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ வரும் 11ம் தேதி காலை 9 மணிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.