Free training on small onion cultivation techniques in modern way in Namakkal

நாமக்கல்லில் நவீன முறையில் சின்ன வெங்காயம் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட தலைவர் டாக்டர் அகிலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 10ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நவீன முறையில் சின்ன வெங்காயம் சாகுபடி தொழில்நுட்பங்கள என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இப்பயிற்சி முகாமில் அதிக மகசூல் தரும் ரகங்கள், விதையளவு, விதை நேர்த்தி செய்யும் முறைகள், நடவு இடைவெளி, பேருட்டம் மற்றும் நுண்ணுட்ட உர மேலாண்மை, களை நிர்வாகம், சொட்டு நீர் பாசன முறையில் நீர் மற்றும் உரமளித்தல், ஒருங்கிணைந்த முறையில் பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் மற்றும் அறுவடை பின்சார் தொழில்நுட்பங்களும் விரிவாகக் கற்றுத் தரப்படும்.

இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ நாளை (9ம் தேதிக்குள்) பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப் படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!