Give it a third chance: MLA TamilSelvan demands from people in Arumbavoor !!
பெரம்பலூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளராக 3வது முறையாக போட்டியிடும் ஆர்.தமிழ்ச்செல்வன் இன்று மாலை தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அங்கு அவருக்கு வீதி வீதியாக சிறப்பு வரவேற்பு வானவேடிக்கையுடன் வழங்கப்பட்டது. மலர் மற்றும் சால்வை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். வீதிவீதியாக பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பாலக்கரை பகுதியில் பேசியதாவது:
அரும்பாவூர் பேரூராட்சிக்கு ரூ.15 கோடி மதிப்பில் கட்டமைப்பு பணிகளை கொண்டு வந்துள்ளேன். குடிநீர் வசதிக்கு ரூ.3 கோடி ரூபாய், சாலை வசதிக்கு ரூ.8 கோடி ரூபாய், மற்ற பணிகளுக்கு ரூ. 4 கோடி என அரும்பாவூர், மற்றும் மேட்டூர் பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், பல நல்ல திட்டங்கள் வளர்ச்சி பணிகள் கொண்டு வர இரட்டை இலை சின்னத்தில், வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும், எந்த நேரத்திலும், என்னை தொலைபேசியிலே தொடர்பு கொள்ள முடியும். மகளிர் சிரமத்தை குறைக்க கடந்த தேர்தலில் விலையில்லா மிக்சி கிரைண்டர் வழங்கியது போல், இந்த தேர்தலிலும் வாசிங்மெசின், 6 சிலிண்டர்கள், குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1500 என பல்வேறு புதிய திட்டங்களை வழங்கவும், நிம்மதியாக வாழவும், அதிமுக வின் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
வாக்கு சேகரிப்பின் போது, அதிமுகவின் கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் திரளாக உள்பட கலந்து கொண்டனர்.