Government bus journeys halved – Will new Transport Minister Sivasankar take action? Passenger staff anticipation !!

பொது போக்குவரத்தாக நடுத்தர மற்றும் ஏழை வகுப்பு பொதுமக்கள் அதிக அளவில் பேருந்து போக்குவரத்தையே நம்பி அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதில் தனியாருக்கு நிகராக, அரசும் பேருந்துகளை கி.மீ ஒன்றுக்கு ரூ. 60 நட்டத்தில் இயக்கி வருகிறது. இதற்கு பொதுமக்கள் பொறுப்பு ஏற்க முடியாவிட்டாலும், அதிகாரிகள், அமைச்சர் செய்யும் திட்டத்தின் தோல்விகளுக்கு மக்கள் மீதே மீண்டும் மீண்டும் வரிவிதித்தோ, கடன் வாங்கியோ புதிய பேருந்துகளை வாங்கி முறையாக பாராமரிப்பு செய்யாமல் வீணாக்குகின்றனர்.

இது மக்களுக்கு ஒன்றும் புதிதல்ல, ஒவ்வொரு முறை ஆட்சிகள் தான் மாறுமே தவிர காட்சிகள் மாறவில்லை! மாறாக பேருந்துகளுக்கான வண்ணம் மட்டுமே மாறியுள்ளது வழக்கம் மாறவில்லை.

தற்போது தமிழகத்தில் இயக்கப்பட்டும் பெரும்பாலான நெடுந்தொலைவு பேருந்துகளுக்கு மாற்று டயர் இல்லை. டயர் பன்சர் ஆனாலோ, வெப்பத்தால் வெடித்தாலோ, நடுவழியில் நிறுத்தி மாற்றி உடனே பேருந்துகளை இயக்க முடியாத நிலை உள்ளது.

பேருந்து பணியாளர்கள் அடுத்த வரும் அரசு பேருந்துகளில் 10 பத்து பேர்களாக அனுப்பி வைக்க வேண்டும். நகரம் மற்றும் புற நகர் பகுதிகளில் என்றால் அரசு பேருந்தில் ஏற்றி செல்வார்கள். அதுவே, நடு இரவோ, அல்லது, நடுவழி நெடுஞ்சாலை பேருந்துகளை நிறுத்தி பயணி ஏற்றி அனுப்பிட போக்குவரத்து ஊழியர்கள் பெரும் அவதிப்பட வேண்டும்.

பயணிகள் அவதியுடன் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்பட வேண்டும். அதுவும், பெண்கள் கைக் குழந்தைகளோடு, அல்லது தனியாகவோ, மூட்டை முடிச்சுகளுடன் வந்திருந்தால் கொஞ்சம் அவர்கள் நிலைமை சற்று சிரமம்தான்.

எனவே, இந்த சிரமத்தை தவிர்க்க புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் சிவசங்கர், புதிதாக சிங்கார பேருந்துகளை விடுவது முக்கியமல்ல, ஏற்னகவே கிராமங்களை, நகரங்களுக்கு இடையே ஓடிக்கொண்டிருக்கும் பேருந்துகளை உரிய முறையில் புதுப்பித்து, இயக்குவதோடு மட்டுமில்லாமல், ஒவ்வொரு பேருந்திற்கும், ஒரு ஸ்டெப்னி வழங்கி பொதுமக்கள் உரிய காலத்தில் பயணத்தை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகள், போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது.

ஒரு ஒரே ஸ்டெப்னி இல்லாததால், அந்த பேருந்து அன்று முழுவதும் ஓடாமல் முடங்குவதோடு, அரசுக்கான வருமானமும் பாதிக்கபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்வாரா இல்லை, முந்தை அமைச்சர்களை போல் செல்வாரா என்பதை மக்கள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

படத்தில் காண்பது : நேற்று மாலை பெரம்பலூருக்கு வந்த, கடலூர் -திருச்சி செல்லும் அரசு பேருந்து, வெப்பத்தால் டயர் வெடித்து நகரில் நின்றது. அவ்வழியாக வந்த மற்றொரு அரசு பேருந்தில் பயணிகளை ஏற்றி விட்ட போது எடுத்தப்படம். இருக்கைகளில் உட்கார்ந்து வந்த பயணிகள் திருச்சி வரை கால்கடுக்க நின்றுக்கொண்டே பயணித்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!