Government buses crash due to shortage of brakes: Drivers fix brakes and lights with their own money!

தமிழகத்தில் அரசு பஸ்கள் ஆங்காங்கே விபத்திற்குள்ளாக காரணம், அரசு பஸ் டெப்போக்களில் பழைய தேய்ந்த பிரேக் ஷீக்களை, அல்லது பிரேக் ட்ரம்மை கழற்றி விட்டு மாற்ற போதிய இருப்பு இல்லாமல் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

ஸ்பேர்கள் இல்லாததாலும், அரசு பஸ் டிரைவர்கள் பெரும் சிரமமத்திற்கு ஆளாவதுடன், எப்போது வேலைநேரம் முடியும் என எதிர்பார்க்கின்றனர்.

மேலும், அரசு டெப்போக்களில் சரி செய்ய வார கணக்கில் ஆவதால், நெடுந்தொலைவு பேருந்து டிரைவர்கள், விபத்துக்ளை தவிர்க்கவும், பாதுகாப்பு கருதியும், தங்களது சொந்த பணத்திலேயே பிரேக் ஷீ வாங்கி போட்டுள்ளனர். பலர் ஹெட்லைட்களையும் பழுது நீக்கம் செய்துள்ளனர்.

சமீபத்தில், அரியலூரில் இருந்து, பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் போது, முன்னே சென்ற பஸ் திடீரென பிரேக் போட்டதால், பின்னால் வந்த அரசு பஸ் ஓட்டுனர் பிரேக் மீது ஏறி நின்றும் பேருந்தை கட்டுப்படுத்த முடியாததால், வலது இடித்து, இடது பக்கம் ஓரமாக சமார்த்தியமாக நிறுத்தி பயணிகள் உயிரை காப்பாற்றினார்.

இதே போல, சில நாட்களுக்கு முன்பு, பெரம்பலூர் சர்க்கரை ஆரை எறையூர் அருகே நடந்த விபத்தில் பேருந்தை ஓட்டி வந்த டிரைவர் பிரேக் பிடிக்கவில்லை என பலத்த சத்தமிட்டுள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில், முன்னால் சென்ற லாரி மீது, மோதி டிரைவர் கண்டக்டர் இருவரும் உயிரிழந்தனர். 12 பயணிகள் படுகாயம் அடைந்தனர். மேலும், பல டவுன்பஸ்களிலும் இதே நிலைமை தொடர்ந்து வருகிறது.

பல நெடுந்தூர பஸ்கள் வழியில் இருக்கும் போக்குவரத்து டெப்போக்களில் பிரேக்கை சரி செய்த வண்ணம் சரி செய்து கொண்டே சென்று வருவதால், உரிய நேரத்திற்கு பயணிகள் செல்லுமிடத்தை அடையமுடிவதில்லை.

உபயோகப்படுத்தப்பட்ட, தேய்ந்த உதிரிபாகங்களையே மீண்டும், மீண்டும் பயன்படுத்துவதால், அது உரிய பலனை தருவதில்லை. இதே டிக்கட் மிசின்களும் நிறைய பழுதாகி கிடக்கின்றன. கண்டக்டர்களும் பழைய டிக்கட் முறைக்கே திரும்பி உள்ளனர்.

தமிழ்நாடு மக்களின் உயிரோடு விளையாடமல், உரிய உதிரிபாகங்களை வாங்கி கொடுத்து, நட்டத்துடன் நட்டமாக இயக்கி, விலை மதிப்பற்ற பொதுமக்களின் உயிரை காக்க வேண்டும் என்பதே டிரைவர், கண்டக்டர், மற்றும் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

அரசியல்வாதிகள் கோடி கோடியாய் கொள்ளை அடித்த அவர்களால் கடைசி வரை வயிராற சாப்பிட முடியாமல் இறந்து விடுகின்றனர். ஆனால், ஏழை எளிய பொதுமக்கள் வயிராற சாப்பிட கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். 

நல்ல வேளை நமது நாட்டில், ஆப்பிரிக்க மம்மிக்களை போல், புதைத்தப்பதாக இருந்தால் அவ்வளவுதான் போலும்…


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!