Government of Tamil Nadu Scholarship for students studying in Central Government Educational Institutions: Perambalur Collector
பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பல் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ,மாணவிகள் 2020-2021ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வி உதவித்தொகையாக மாணவர; ஒருவருக்கு ஆண்டிற்கு ரூ.2.00 இலட்சம் வரை முதற்கட்டமாக 100 மாணவ, மாணவியர;களுக்கு 2019-20ம் கல்வி ஆண்டு முதல் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிட்டுள்ளது.
2020-2021ம் கல்வி ஆண்டிற்கான கல்வித் தொகைக்கு, விண்ணப்பிக்க விரும்பும் புதிய தகுதியான மாணவர்கள், இயக்ககத்தையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களையோ அணுகி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் www.perambalur.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும் மேற்படி கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து இயக்குநர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 15.02.2021க்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-28551462 என்ற தொலைபேசி எண்ணிலோ, tngovtiitscholarship@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.