Gram Sabha meeting in front of Labor Day in Perambalur district || பெரம்பலூர் மாவட்டத்தில் , தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் மே தினத்தையொட்டி 121 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் நொச்சியம் ஊராட்சியில் இன்று நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாலன் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் நொச்சியம் ஊராட்சியில் நடைபெற்ற வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், அந்தியோதயா இயக்கம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், திட்ட அறிக்கை, சுகாதாரம், மாகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை உறுதிதிட்டம், இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் பொதுமக்களுடன் விவாதிக்கப்பட்டது.

ஊராட்சியில் குடிநீர் வழங்கும் பணி, சுகாதாரம், பால் உற்பத்தி, மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் வேலைத்திட்டத்தில் ஊதியம் அளிக்கபடுவது, தெரு விளக்குகள், குழந்தைகள் மைய செயல்பாடு, அடிப்டை கட்டமைப்பு வசதிகள், கழிப்பிட வசதி, விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், நியாய விலைக்கடைகளில் பொருட்கள் இருப்பு, பசுமை வீடுகள் திட்ட பயனாளிகள், இந்திரா காந்தி நினைவு குடியிருப்பு திட்ட பயனாளிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

தூய்மை பாரத திட்டத்தின் சார்பில் சுற்றுபுறத்தை தூய்மையாகவும் சுகாதாரமாக முற்றிலும் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி, மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!