Gramma shaba meeting in Perambalur district on Independence Day: Collector V.Santha

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள அறிவிப்பு:

கிராம சபைக் கூட்டம் பெரம்பலூர் ஊராட்சித் தனி அலுவலர்களால் நடைபெற உள்ளது, அதில், ஏற்கெனவே நடந்த கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும்.

மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக அறிவித்தல், கட்டி முடிக்கப்பட்டுள்ள கழிப்பறைகளை பயன்படுத்துதல் மற்றும் பயன்படுத்தாத நபர்களின் பெயர்களை கிராம சபையில் வாசித்தல்.

அனைத்து ஊராட்சிமன்ற தனி அலுவலர்கள் தாங்கள் செய்த செயல்பாடுகளை கூட்டத்தில் தெரிவித்திட வேண்டும். அரசு அலுவலர்கள் கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல் வேண்டும். அரசு நலத் திட்டங்களை கூட்டத்தில் வழங்குதல் வேண்டும். அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிதல் வேண்டும்.

ஆக.15. சுதந்திர தினத்தன்று கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தாங்கள் வாக்காளர்ர்களாக சார்ந்துள்ள கிராம ஊராட்சிகளில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கிராம சபைக் கூட்டம் நல்ல முறையில் சீரும் சிறப்புமாக நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரால் (கி.ஊ) பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மண்டல அலுவலர்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளும், பொது மக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்து தக்க ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா கேட்டுக் கொண்டுள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!