Guru Shiksha Festival at Perambalur Dharma paripalana Sangham called
பெரம்பலூரில் உள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் நாளை குருப்பெயர்ச்சி விழா நடக்கிறது.
நாளை இரவு 10.02 மணிக்கு குருபகவான், துலாம் ராசியில் இருந்து,விருச்சக ராசிக்கு பெயர்ச்சிடைகிறார்.
இதனால், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் எழுந்தருளி அருள்பாளித்து வரும் அருள்மிகு தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு, இரவு 7.30 மணிக்கு விநாயகர் பூஜை, அனுக்ஞை, கும்பபூஜை, திரவிய ஹோமம், பூர்ணாஹீதி, தீப ஆராதனையும், இரவு 8.30 மணிக்கு மஹா அபிஷேகம், கலச தீர்த்த அபிஷேகமும், இரவு 10.02 மணிக்கு மஹா தீப ஆதாரதனைகளும், பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது. இதற்கு பெரம்பலூர் தர்ம பரிபாலன சங்கம் விழா உபயதாராகி வழங்குகிறது.
சுப ராசி பலன்கள்: ரிஷபம், கடகம், துலாம் மற்றும் மீன ராசிகள். பரிகார ராசிகள் மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சகம், தனுசு, கும்பம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழச்சியில் கலந்து கொண்டு குரு பகவானிக் திருவருள் பெற வேண்டுமென தர்ம பரிபாலன சங்கம் தெரிவித்துள்ளது.