Heavy rain, with lightning in various locations in the Perambalur district
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மாலை பல்வேறு இடங்களில் பலத்த இடி மின்னலுடன் பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழச்சி அடைந்துள்ளனர்.
வறட்சி மாவட்டமான பெரம்பலூரில், கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இன்று மாலை திடீரென இடியுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது. பெரம்பலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளான சிறுவாச்சூர், புதுநடுவலூர், நொச்சியம், வேலூர், சத்திரமனை, செட்டிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, மானாவாரி சாகுபடியில் பயிரிடப்பட்டிருந்த கம்பு, சோளம், மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு இம்மழை பெரிதும் பயன் தரும் என்பதால், உழவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.