Hero Passion XTech New Bike Launch Ceremony at Perambalur Sivagamam Motors Company!
பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள சிவகாமம் மோட்டார்ஸ் கம்பெனியில் “ஹீரோ பாஸன் எக்ஸ்டெக்” (PASSION X TECH) புதிய பைக் அறிமுக விழா சிவகாமம் மோட்டார்ஸ் இயக்குனர் பரமேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
எல்.ஈ.டி, டிஜிட்டல் மீட்டர், டிஸ்க் பிரேக், ஐ.பி.எஸ், ரியல் டைம் மைலேஜ் இண்டிகேட்டர், மொபைல் சார்ஜிங் மற்றும் புளுடூத் வசதிகளுடன் அதிக மைலேஜ் தரக்கூடிய “ஹீரோ பாஸன் எக்ஸ்டெக்” புதிய பைக் அறிமுக விழா நடைபெற்றது. புதிய முதல் பைக்கை அரும்பாவூர் ஜஹாங்கீர் என்பவர் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன், திமுக மாவட்ட செயலாளர் சி.இராஜேந்திரன், ஓய்வு பெற்ற ஆசிரியர் இரா.பச்சமுத்து, பெரம்பலூர் நகராட்சி துணை சேர்மன் ஹரிபாஸ்கர், சிவகாமம் மோட்டார்ஸ் இயக்குனர் துளசி, பொறியாளர் சிவராஜ், வி.எஸ்.தமிழ்செல்வன், விற்பனை மேலாளர் கார்த்திகேயன், பணிமனை மேலாளர் மகேஷ் மற்றும் சிவகாமம் மோட்டார்ஸ் தொழிலாளர்கள், மற்றும் நிதி நிறுவன அதிகாரிகள், கலந்து கொண்டனர்.