Hidayat Abdul Hamed – Ambassador of Malaysia – India; Praises Dato ‘PRAKADEESH KUMAR, a businessman who helped the public and workers during the Corona period!

கொரோனா காலத்தில், பொதுமக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் உதவி செய்த தொழிலதிபர் டத்தோ.பிரகதீஷ்குமாருக்கு (DATO. PRAKADEESH KUMAR MD., PLUS MAX Group of Companies), மலேசியா நாட்டின், இந்தியாவிற்கான தூதர் பாராட்டு தெரிவித்தார்.

மலேசியா நாட்டின், இந்தியாவிற்கான தூதர் டத்தோ ஹிதயாத் அப்துல் ஹமீது தென்னிந்திய கலாச்சாரம், உணவு, கட்டடக்கலை உள்ளிட்ட பாராம்பரிய முறைகள் அறிந்து கொள்ள வந்திருந்தர். பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியில் உள்ள இந்தியாவை சேர்ந்த தொழிலபதிர் டத்தோ பிரகதீஷ்குமார் வீட்டிற்கு சிறப்பு கவுரவ விருந்தினராக வந்திருந்த அவர், பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அவர் பேசியதாவது:

கொரோனோ தொற்றினால் மலேசிய நாட்டில் பணியாற்றிய சுமார் 2 மில்லியன் தொழிலாளர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பியதால், தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் மட்டுமின்றி நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியும் சந்தித்துள்ளது.

மலேசிய நாட்டில் வருகின்ற மார்ச்.31 உடன் கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. ஏப்ரல் மாதம் 1.ம் தேதி முதல் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட உள்ளது. இதனால், மீண்டும் சகஜ நிலை திரும்பும், மலேசியா நாட்டில் பணிபுரிந்த தொழிலாளர்கள் மீண்டும் மலேசியாவிற்கு திரும்ப முடியும் , நிறுவனங்கள் வழக்கம்போல செயல்படும். மலேசியா திரும்பும் இந்தியத் தொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது அவசியம்.

உக்ரைன் ரஷ்யா போரினால் மலேசியாவிற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. மலேசியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட வில்லை எனவே மலேசியாவில் படிக்கும் இந்திய மாணவர்களை பற்றி அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியா – மலேசியா உறவு என்பது பல நூறு ஆண்டுகாளக தொடர்ந்து வருகிறது. இந்தியாவில் இருப்பவர்களுக்கு, மலேசியாவில் உறவினர்கள் இருப்பார்கள், அதே போல், மலேசியாவில் இருப்பவர்களுக்கு இந்தியாவில் இருப்பார்கள். இரு நாடுகளும் பொருளாதார, வணிக ரீதியாகவும், பலமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

உங்கள் நாட்டை சேர்ந்தவரும், எங்கள் நாட்டின் தொழிலதிபருமான டத்தோ பிரகதீஸ்குமார் கொரோனா காலத்தல் பொதுமக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இரு நாட்டினரும், தங்களது சொந்த செலவில், அவரவர் நாட்டிற்கு செல்ல எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல் விமானத்தில் செல்ல அனுப்பி வைத்து உதவியது மிகவும் பாராட்டுக்குரியது என பாராட்டி பேசினார். தென்னிந்திய கலாச்சாரம் தமக்கு மிகவும் பிடித்து இருப்பதாகவும், தெரிவித்தார்.

அப்போது, தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார், உள்ளிட்ட கிராம முக்கிய பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!