Honorary doctorate for A. Ramkumar Vidyalaya school principal Almighty: World Tamil University provided.
ஆல்மைட்டி வித்யாலயா பள்ளி தாளாளர் எ.ராம்குமாருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் : உலக தமிழ்ப் பல்கலைக் கழகம் வழங்கியது.
அமெரிக்காவில் கடந்த 19.11.2016 அன்று உலக தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பள்ளி (சிபிஎஸ்இ) பள்ளி தாளாளர் எ.ராம்குமாரின் பணியினை பாராட்டி பல்கலைக்கழக தலைவர் டாக்டர் எஸ்.செல்வின்குமார் தலைமையில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விழாவில் முனைவர் லேனா.தமிழ்வாணன், முனைவர்.ரவிதமிழ்வாணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதையொட்டி சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பள்ளியில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு செயலாளர் சிவக்குமார் துணை முதல்வர் மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி முதல்வர் சாரதா செந்தில்குமார் தாளாளருக்கு பூங்கொத்து வழங்கி ஆசிரியர்கள் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தார்.
பின்னர் தாளாளர் ராம்குமார் பள்ளி மாணவ மாணவிகளுடன் உரையாற்றும் போது ஒவ்வொருவரும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் மூடநம்பிக்கையை ஒழித்து வாழ்க்கையில் நல்ல எண்ணங்களுடன் செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆசிரியைகள் ஹேமமாலினி, சந்த்ரோதயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.