Hundi opening in Namakkal Anjaneya temple: Rs 36.91 lakhs offering devotees
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. அதில் ரூ.36 லட்சத்து 91 ஆயிரத்து 591 காணிக்கை இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உண்டியல் திறப்பு
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் நாமக்கல் மட்டும் இன்றி, வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இவர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோவில் வளாகத்தில் நிர்வாகம் சார்பில் உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த உண்டியல்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படும். வழக்கம்போல் நேற்று உண்டியல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் உமாதேவி, ரமேஷ், தமிழரசு, தக்கார் வெங்கடேஷ், ஆய்வாளர் அம்சா ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு, அதில் இருந்த பணம் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் வங்கியாளர்கள் மூலம் எண்ணப்பட்டது.
ரூ.36.91 லட்சம் காணிக்கை இதில் ரூ.36 லட்சத்து 91 ஆயிரத்து 591&ம், 4 கிராம் தங்கமும், 44 கிராம் வெள்ளியும் இருந்ததாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம் 26 -ந் தேதி உண்டியல் திறக்கப்பட்டது. அப்போது அதில் ரூ.16 லட்சத்து 42 ஆயிரத்து 577&ம், 11 கிராம் தங்கமும், 175 கிராம் வெள்ளியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.