husband who murdered his wife arrested near in Perambalur!
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கொலை செய்த கணவனை பொதுமக்கள் தகவலின் பேரில் போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூ அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சோலைமுத்து (வயது 45), இவரது மனைவி ஜோதி (35). இவர்களது மகள் கஸ்தூரி (16), என்ற பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அஜீத் என்ற மகனும் உள்ளார். அவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் சோலைமுத்து, சத்தம் வெளியில் கேட்காமல் இருக்க மனைவி ஜோதியின் வாயில் துணி வைத்து அடைத்து கொடூரமாக தாக்கி உள்ளார். மேலும், தாலிக்கயிற்றை வைத்தே கழுத்தை நெறித்து கொன்றுவிட்டார்.
இத்தகவல் அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வரவே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் ஜோதியின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுககாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்த கணவன் சோலைமுத்து கைது செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.