Husband’s suicide in family dispute in Perambalur
பெரம்பலூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் குமார் (வயது 46), இவருக்கு சுதா (வயது 26) என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த குமார் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது மனைவி சுதாவுடன் ஏற்பட்ட குடும்பத்தகராறில் மனமுடைந்த குமார் இன்று மாலை சுமார் 6 – 7 மணியளவில் வீட்டு சாரளத்தில் இருந்த காற்றாடியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குமாரின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
வழக்குப் பதிவு செய்து குமார் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.