Identity Card for Women Self Help Groups: Collector Information

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

சுய தொழில் நிறுவனங்கள் அமைப்பது உள்ளிட்ட அனைத்து உதவிகளுக்கும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கங்களின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் முன்னேற்றம் பெற சுய தொழில் தொடங்கவும் மற்றும் வேலை வாய்ப்பு பெறவும், பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது பல்வேறு சுய வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் உற்பத்தி செய்யக் கூடிய மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வாழ்வாதார திட்டத்தின்கீழ் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளது.

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உற்பத்தி செய்யக்கூடிய தயாரிப்புகளை வணிக வளாகம், கல்லூரி சந்தைகள் மற்றும் பெருமளவில் மக்கள் பங்கேற்கக்கூடிய விழாக்களில் கண்காட்சிகள் அமைத்து சந்தைக்கான வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படுகிறது. இனிவரும் காலங்களில் இத்தகைய சந்தைகளில் சந்தைப்படுத்தும் குழுக்கள் மேற்கூறிய அடையாள அட்டையுடன் கலந்துகொள்ள வேண்டும்.

எனவே, சுய தொழில் பயிற்சி பெறுவது, சுய தொழில் நிறுவனங்கள் அமைப்பது மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகிய அனைத்து உதவிகளுக்கும் பயன்பெற உத்தேசித்துள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதிக்கான களப்பகுதி வழிநடத்துனர்கள், வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மகளிர் திட்ட அலுவலகத்தை அணுகி இதற்குரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஒப்படைத்து உரிய அடையாள அட்டையினையும் மற்றும் ஆலோசனைகளையும் பெறவேண்டும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!