If a parent condemned the daughter who spoke on the cellphone, the depressed daughter jumped into the well and committed suicide!
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகேயுள்ள புதுவிராலிப்பட்டியை சேர்ந்தவர் தேவராஜ், விவசாயி, இவரது மகள் சுஜிதா (வயது 18). இவர் திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இந்நிலையில் சுஜிதா அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதே போல், நேற்றிரவும் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனை தேவராஜ் கண்டித்துள்ளார்.
இதனால், மனமுடைந்த சுஜிதா இன்று காலை வயலுக்கு சென்றவர் அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். தேவராஜ் கொடுத்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சுஜிதாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கா பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.