perambalur_collectorate வாக்களிக்க வற்புறுத்தி பணம் வழங்கினால் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.நந்தகுமார் தெரிவித்துள்ளதாவது :

வாக்காளர்களை தூண்டுகிற நோக்கத்துடனோ அல்லது வாக்களர்களின் உரிமையை செயல்படுத்துகிற நோக்கத்துடனோ யாதொரு நபருக்கும் கையூட்டை பணமாகவோ, பொருளாகவோ கொடுத்தது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நபருக்கு இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 171 B-ன்படி ஒரு வருடம் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும்.

வேட்பாளரையோ அல்லது வாக்காளரையோ அல்லது யாதொரு நபரையோ ஏதாவதொரு வகையில் காயப்படுத்துபவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 171C-ன் படி ஒருவருட சிறைவாசம் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும்.

கையூட்டு அளிக்கும் நபர்கள் மற்றும் கையூட்டு பெறுபவர்கள் மீதும், வாக்காளர்களை மிரட்டுபவர்கள் மற்றும் தூண்டுபவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

யாதொரு நபர் கையூட்டு அளிக்க முன்வந்தாலோ, கையூட்டு அளிக்கும் நோக்கில் இருந்தாலோ அல்லது வாக்காளர்களை மிரட்டினாலோ, தூண்டினாலோ புகார் தெரிவிக்க மாவட்ட புகார் கண்காணிப்பு குழுவின் மூலம் 24 மணி நேரமும் செயல்படுத்தப்பட்டு வரும் இலவச தொலைபேசி 18004257031 எண்ணிற்கு தகவல் அளிக்கலாம்.

மேலும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் தெரிவிக்க விரும்பும் நபர்கள் பெரம்பலூர் மாவட்டத்திற்கான தேர்தல் செலவினப் பார்வையாளர் ராஜேஸ் கவுலி 89030-24608 என்ற எண்ணிலும்,

மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரை 94441-75000 என்ற எண்ணிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்திராவை 94981-02103 என்ற எண்ணிலும்,

பெரம்பலூர் சட்ட மன்றத் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான பேபியை 94450-00458 என்ற எண்ணிலும்,

குன்னம் சட்ட மன்றத் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரும் – மாவட்ட வழங்கல் அலுவலருமான கள்ளபிரானை 94450-00270 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

மேலும், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கான உதவி செலவினப் பார்வையாளர் ரமேஷ் குமாரை 89030-24614, குன்னம் சட்ட மன்றத் தொகுதிக்கான உதவி செலவினப் பார்வையாளர் ஸ்ரீதரை 89030-24611 என்ற எண்ணிலும்,

செலவினங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவரும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளருமான (கணக்கு) சிலுப்பனை 94433-9337 என்ற எண்ணிலும்,

காவல்துறை ஒருங்கிணைப்பாளரை 83000-11110 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தேர;தல் விதிமீறல் குறித்த புகார்களை தெரிவிக்கலாம்.

நேர்மையான முறையிலும், கண்ணியமான முறையிலும் தேர்தலை நடத்த பொதுமக்களின் ஒத்துழைப்பும் இன்றியமையாததாகும். எனவே, தங்கள் பகுதியில் ஏதேனும் தேர்தல் விதிமீறல் நடைபெறுவது குறித்த தகவல்களை அறிந்தால் உடனடியாக மேற்கண்ட எண்களில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும். மேலும் வாட்ஸ்ஆப்பில் 9444123456 என்ற எண்ணிலும் தகவல் அளிக்கலாம்.
என இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!