If the death of a pregnant woman being treated late: relative roadblock to protest the hospital in perambalur

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தை சக்திவேல் இவரது மனைவி அலமேலு (வயது 25). கர்ப்பிணியான இவருக்கு சமீபத்தில் வளைக்காப்பு நடத்தப்பட்டு அனுக்கூரில் உள்ள தாய்வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டிருந்தார்.

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மசக்கை மற்றும் மயக்கத்தால் மயங்கி விழுந்துள்ளார். இதில் வயிற்றில் பலத்த அடி பட்டதால் அங்கிருந்தவர்கள் இவரை நேற்று காலை சுமார். 11.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் பரிசோதித்து சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், அலமேலுவிற்கு மீண்டும் மாலை 7 மணி அளவில் கடும் வயிற்று வலி ஏற்படவே பரிசோதித்த மருத்துவர்கள் நேற்றிரவு சுமார் 10 மணி அளிவில் கர்ப்பப்பையில் இறந்த குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று மாலை சிகிச்சை பெற்று வந்த நிலையில் அலுமேலு மரணமடைந்தார்.

இதனால் ஆத்திரமுற்ற உறவினர்கள் மருத்துவமனையின் காலதாமத்தால் ஏற்பட்டதால் தான் அலமேலு உயிரிழந்தார் எனக் கூறி பெரம்பலூர் – துறையூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தன் பேரில் பின்னர், கலைந்து சென்றனர்.

இது குறித்து பெரம்பலூர் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!