If the government does not cancel the hike in the cost of drinking water and Property Tax, the protest will be decided at Namakkal DMK meeting
நாமக்கல் நகராட்சியில் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள குடிநீர் கட்டணம் மற்றும் சொத்து வரியை உடனடியாகக் குறைக்காவிட்டால் போராட்டம் நடத்துவதென்று நகர திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் நகர திமுக பொதுக்குழு கூட்டம் நகர பொறுப்பாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:
நாமக்கல் நகராட்சியில் ஏற்கனவே சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து புதிய குடிநீர் திட்டப்பணிகள் முடிவடையும் வரை குடிநீர் கட்டண உயர்வு ஒத்தி வைக்கப்பட்டது.
தற்போது புதிய குடிநீர் திட்டப்பணிகள் நிறைவடையும் முன்வே மீண்டும் பல மடங்கு சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உடனடியாக சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டண உயர்வை ரத்து செய்யாவிட்டால் நகர திமுக சார்பில் பொதுமக்களை ஒன்றுதிரட்டி போராட்டத்தில் ஈடுபடுவதென்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வருகிற உள்ளாட்சி மற்றும் பார்லி தேர்தலில் திமுக வேட்பாளர்ள் வெற்றிபெறும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவதென்று மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்திப்பட்டது.
மாநில நிர்வாகிகள் ராணி, நக்கீரன், மாவட்ட துணை செயலாளர் ராமலிங்கம், மாவட்ட பொருளாளர் செல்வம், இளைஞரணி துணை அமைப்பாளர் ராணா ஆனந்த், நகர பொறுப்புக்குழு உறுப்பிரனர்கள் சரவணன், பூபதி, செழியன், வக்கீல் ஈஸ்வரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.