If you have a cold, fever, cough, you should get a corona test: Perambalur Collector Information!

பொதுமக்கள் காய்ச்சல், சளி, இருமல், தும்மல், மூச்சுத்திணறல், தலைவலி, தொண்டை வலி, உடல்வலி, நாக்கு சுவையின்மை மற்றும் மூக்கு மனமின்மை போன்ற அறிகுறிகள் இருந்தால் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என பெரம்பலூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால், பொதுமக்கள் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றிட வேண்டும். அவசர மற்றும் அத்தியாவசிய காரணத்திற்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும்.

மேலும், கொரோனா நோய்த்தொற்று அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல், தும்மல், மூச்சுத்திணறல், தலைவலி, தொண்டை வலி, உடல்வலி, நாக்கு சுவையின்மை மற்றும் மூக்கு மனமின்மை போன்றவற்றில் ஏதாவது ஒரு அறிகுறி இருந்தால் பொதுமக்கள் எவ்வித அச்சம், பயம் கொள்ள தேவையில்லை. அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில் தங்களது இருப்பிடத்திலிருந்து கொரோனா பரிசோதனைக்காக தொலைதூர மருத்துவமனைக்கோ அல்லது பொது சுகாதார மையத்திற்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை. ஊராட்சி அல்லது கிராமப்புற பகுதிகளிலேயே பொது சுகாதாரத் துறை மூலம் மருத்துவப் பணியாளர்களைக் கொண்ட மருத்துவக் குழு செயல்பட்டு வருகிறது. அக்குழுவினர;களை அணுகி கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

பொதுமக்கள் கோவிட்-19 கொரோனா நோய் சம்மந்தமாக ஏற்படும் சந்தேகங்களை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் உள்ள 1077, 91541 55097 மற்றும் 1800 425 4556 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 104 என்ற கட்டணமில்லா தொலைபேசியையும் தொடர்பு கொள்ளலாம்.

கோவிட்-19 நோய் தொற்று பரவல் காலத்தில் வீட்டில் தனிமையில் அல்லது உறவினர்களுடன் தங்கி உள்ள மூத்த குடிமக்கள் தங்களுக்கு தேவைப்படும் அவசர உதவிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக சேவைகள் பெற்றிடவும், கோவிட்-19 குறித்த விளக்கங்கள் பெற்றிடவும் 93840 56223 என்ற அவசர தொலைபேசி எண்ணிலும், மாவட்ட சமூக நல அலுவலகத்தை 04328 – 296 209 என்ற தொலைபேசி எண்ணிலும், அவசர உதவி எண் (இலவச சேவை எண்) 181- லும், ஒருங்கிணைந்த சேவை மையம் – நிர்வாகி அவர்களை 63804 69886 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம், என்றும், நோய் பரவலைக் கட்டுப்படுத்திட மாவட்ட நிர்வாகம் மேற்கோள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!