in hiding a secret directive the shot to district secretary of the Purtci bharatham ?
பெரம்பலூர் மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளராக இருப்பவர் வெள்ளையன். இவர் மீது வழக்குகள் பல நிலுவையில் இருந்து வந்துள்ளது. மேலும், சில வழக்குகள் வாபஸ் பெறப்பட்டும், சில வழக்குகளில் விடுதலையும் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் இவர் மீது கொடுக்கப்பட்ட புகார்களின் மேல் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை முறையான நடவடிக்கை எடுக்காமல் வழக்குகளை கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் பாதிப்படைந்த புகார்தாரர்கள் உரிய நியாயம் வேண்டி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
முதலமைச்சரின் தனிப்பிரிவு திருச்சி மண்டல ஐ.ஜிக்கு வெள்ளையனை பிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை அறிந்த புரட்சி பாரதம் மாவட்ட செயலாளர் வெள்ளையன், தனது ஆதரவாளர்களுடன் தலைமறைவானர். கடந்த 20 நாட்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்திய காவல் துறை வெள்ளையன், சென்னை இருக்கும் இடத்தை மட்டுமே உறுதி செய்ய முடிந்தது. ஆனால் வெள்ளையனை நெருங்க முடியவில்லை, தனிப்படை தீவிர தேடுதல் வேட்டையின் போது புரட்சி பாரத மாவட்ட செயலாளர் வெள்ளையனை சுட்டுப்பிடிக்கவும் ரகசிய உத்தரவும் போலீசாருக்கு பிறக்கப்பட்டுள்ளது.