In his own constituency, Minister SS Sivasankar thanked the voters and received petitions.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதிக்கு உட்படட வரகூர் கிராமத்தில் பிறபட்டோர் நலத்துறை அமைச்சரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று காலை வரகூரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார். திமுக மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன், மாநில ஆதிதிராவிட நலக்குழு துணை செயலாளர் பா.துரைசாமி, மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் வி.எஸ்.பெரியசாமி, பொதுக்குழு உறுப்பினர் பட்டுச்செல்வி ராஜேந்திரன், வேப்பூர் தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் சி.ராஜேந்திரன், வேப்பூர் ஒன்றிய பெருந்தலைவர் பிரபாசெல்லப்பிள்ளை, திமுக நிர்வாகிகள் மற்றும் விசிக உள்ளிட்ட கூட்டணி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதே போல குன்னம், கரம்பியம், மூங்கில்பாடி, ஒதியம் உள்ளிட்ட கிராமங்களில் நன்றி தெரிவித்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.