In many places in Perambalur district, windy heavy rains were found

பெரம்பலூர் மாவட்டம் எசனை, வேப்பந்தட்டை, அனுக்கூர், வடக்குமாதவி, சோமண்டாபுதூர், ஆலம்பாடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இன்று மாலை பல்வேறு ஊர்களில் இன்று காற்றுடன் கூடிய மழை பெய்தது.

விவசாயத்தை முக்கிய தொழிலாக பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று தீபாவளி கொண்டாடப்பட்டு வரும் வேளையில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில ஆண்டுகளாக வறட்சியால் பாதிக்கப்பட்டு விவசாயம் நலிவடைந்த நிலையில் தென்மேற்கு பருவமழை பெய்ததால் ஆடி, மற்றும் ஆவணி பட்டங்களில் மானாவாரி சாகுபடி பயிர்களான மக்காச்சோளம், பருத்தி, கம்பு, ஆமணக்கு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது பெய்து வரும் மழையால் தீபாவளியுடன் மகிழ்ச்சியுடன் இரட்டிப்பு மகிழச்சியை மழை மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அளித்துள்ளது. இந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் விவவாயிகள் அதிக முதலீட்டை சாகுபடி செய்திருப்பதால் இன்றைய தீபாவளியை கொண்டாடுவதில் அதிக அக்கறை காட்டவில்லை. விளைச்சல் அறுவடையானதும் பொங்கலை சிறப்பாக கொண்டாட முடிவு செய்து தீபாவளி பண்டிகை செலவுகளை சிக்கனமாக முடித்து கொண்டனர்.

அரசு ஊழியர்கள், வர்த்தகர்கள் மட்டும் இந்த ஆண்டு தீபாவளியை சீரும் சிறப்புமாக கொண்டாடினர். இன்றைய மழை உழவர்கள், கால்நடை வளர்ப்போர்கள், மற்றும் வேளாண் சார்ந்த தொழில்கள் செய்வோர்கள் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!