In Perambalur, a 2.5-pound gold jewelry young woman who was taken to mortgage her husband’s medicine was stolen

பெரம்பலூர் : அரசுப் பேருந்தில் வந்த இளம் பெண்னிடம் இரண்டரை பவுன் தங்க நகை ரொக்க பணம் திருட்டு: கணவரின் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள பணத் தேவைக்காக நகை அடகு வைத்திட வந்த போது நேர்ந்த பரிதாபம்

பெரம்பலூர் அருகே உள்ள களரம்பட்டி கிராமம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் ராமராஜ், இவரது மனைவி சுதா (வயது 25) கடந்த சில மாதத்திற்கு முன்னர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ராமராஜ் திருச்சியிலுளள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவு செலவிற்காக, நகையை அடகு வைத்து பணம் பெற இன்று காலை சுதா களம்பட்டி கிராமத்திலிருந்து பெரம்பலூருக்கு ஒரு அரசு பேருந்தில் வந்துள்ளார்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் வந்து பார்த்த போது அவர் வைத்திருந்த , இரண்டரை பவுன் தங்க (செயின்) நகை மற்றும் 1500 ரூபாய் ரொக்க பணம் மற்றும் செல்போன் வைத்திருந்த மணிப்பர்சை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.

சுதா பேருந்து நிலையத்தில் அங்கும் இங்கும் ஓடிச்சென்று பர்சை தேடி பார்த்து கணவரின் மருத்துவ செலவுக்காக நகையை அடகு வைத்திட எடுத்து வந்த தகவலை சொல்லி கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள், அவரை புதிய பஸ் நிலைய காவல் உதவி மையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, நடந்த சம்பவம் குறித்து சுதா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுதாவிற்கு வழி செலவிற்கு பணம் கொடுத்து பெரம்பலூர் காவலர்கள் அனுப்பி வைத்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!