In Perambalur, ahead of Diwali, the municipality will remove around 20 tons of garbage!
பெரம்பலூர் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. இவற்றில் தினந்தோறும், வீடுகள், கடைகள், தொழிற்கூடங்கள், காய்கறி சந்தை, உழவர் சந்தை, ஹோட்டல்கள், பேக்கரிகள், ஸ்வீட் கடைகள் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுப்பொருட்கள், நகராட்சி நிர்வாகத் தின் மூலம் சுமார் 200 தூய்மை பணியாளர்களை கொண்டு அகற்றப்பட்டு வருகிறது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்படும் காய்கறி, உணவுக் கழிவுகளையும் நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தி வருகிறது. மருத்துவக்கழிவுகள் தனியார் நிறுவனங் கள் மூலம் அந்தந்த மருத்துவமனை நிர்வாகத்தின் மூலம் அகற்றப் பட்டு வருகின்றன.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி கடைகள், பட்டாசு கடைகள், இனிப்பகங்கள், தள்ளு வண்டி பழக்கடைகள் ஆகியவற்றில் இருந்து வெளியேற்றப்பட்ட குப்பைகள் மற்றும் இளைஞர்கள், சிறுவர்கள் வெடிகள் வெடித்த வைத்ததில் உண்டானகுப்பைகள், காய்ந்த மலர் மாலைகள் என 2 நாட்களில் சுமார் 20 டன் குப்பைகளை நகராட்சி 2 சுகாதார ஆய்வாளர்கள், 12 சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் 190 தூய்மை பணியாளர்களை கொண்டு முழுவீச்சில் அகற்றப்பட்டதாக நகராட்சி ஆணையர் ராமர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம் மற்றும் மோகன் ஆகியோர் தெரிவித்தனர். மேலும் அனுமதிபெறாமல் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளும் அகற்றப்பட்டது. குப்பைகள் மக்கும், மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மறு சுழற்சி செய்யப்பட்டுள்ளது.