In Perambalur – Ariyalur district, liquor sales at TASMAC on a single day of Diwali were Rs. 5 crore 6.3 lakh! Decreased due to rain!
பெரம்பலூர் – அரியலூர் மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு ஒரே நாளில் டாஸ்மாக்கில் 5 கோடியே 6.3 லட்சத்திற்கு மது விற்பனை நடந்துள்ளது
பெரம்பலூர் – அரியலூர் மாவட்டத்தில் சுமார் 90 டாஸ்மாக் மதுக் கடைகள் உள்ளன. வழக்கமாக ஞாயிற்று கிழமை ரூ. 2.5 கோடிக்கு பீர், பிராந்தி, விஸ்கி, ரம். ஜின் என ரூ. 2.5. கோடிக்கு விற்பனையாகும். தீபாவளியை முன்னிட்டு பெரம்பலூர் -அரியலூர் மாவட்டத்தில் மது விற்பனை இரு மடங்காக ரூ. 5,06,29,900க்கு விற்பனையாகி உள்ளது. ஆனால், கடந்த ஆண்டை விட இது சுமார் பத்து சதவீதம் குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு 5 கோடியே 44 லட்சத்து 35 ஆயிரத்து 140 க்கு விற்பனையானது. தீபாவளி நாளன்று தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வந்ததால் மது பிரியர்கள் கடைக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது எனக் கூறப்படுகிறது.











kaalaimalar2@gmail.com |
9003770497