In Perambalur collector analysis of agricultural projects in the area of Veppur Union
collector-perambalurபெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வேளாண்மைத்துறை மற்றும் அதன் சார்பு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்டசி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிக்குட்பட்ட இடங்களில் வேளாண்மைத்துறை மற்றும் அதன் சார்பு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

எழுமூர் கிராமத்தில் மாவட்ட நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமை என்ற வேளாண் சார்ந்த துறையின் மூலம் புல எண்: 17-ல் ரூ.1 லட்சத்து 50 ஆயிமம் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணையினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், தொடர்பான அளவுகள் குறிக்ப்பட்டுள்ள ஆய்வு புத்தகத்தை பார்வையிட்டு அதனடிப்படையில் தடுப்பணையின் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும் சரி பார்த்தார்.

எழுமூர் கிராமத்தில் முதலமைச்சர் அவர்களின் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட பண்ணை உற்பத்தித் திட்டத்தின்கீழ் மாவட்ட நீர் வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலம் காசியம்மாள் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் நடவு செய்யப்பட்டுள்ள தேக்கு மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

பின்னர் வேளாண்மை பொறியியல் துறை மூலம் எழுமூர் கிராமத்தில் ஆர். சீத்தாபதி என்பவரது வயலில் ரூ.34லட்சத்து 84 ஆயிரம் மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார்; மின் மோட்டாரை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

சோலார் மின் மோட்டார் மூலம் பயனுள்ளதாக என்றும்,இதன் மூலம் எவ்வளவு அதிகப்படியான பயிர் சாகுபடியாகிறது என்றும் விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.

காருகுடி கிராமத்தில் அழகுதுரை என்பவரது வயலில் ரூ.2 லட்சத்து 68 ஆயிரத்து750- ரூபாய் மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள கோழிப்பண்ணை கொட்டகையினை பார்வையிட்டார். கோழிப்பண்ணை அமைப்பது பயனுள்ளதாக இருக்கிறதா என்றும், மானியத்தொகைகள், கடனுதவிகள் முறையாக வழங்கப்படுகிறதா என்றும் மாவட்ட ஆட்சியர் அழகுதுரையிடம் கேட்டறிந்தார்.

மேலும், கோழிப்பண்ணையில் தனியாக 750 சதுர அடியில் வான் கோழி, கிடா கோழி, நாட்டுக் கோழி வளர்ப்பு செய்து அதனை உள்ளூரிலேயே விற்பனை செய்து வருமானத்தை பெருக்கிட மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார். அந்த 750 சதுர அடி கொட்டகைக்கு அரசு மான்யமும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பெருமத்தூர் கிராமத்தில் சின்னம்மாள் என்பவர் வயலில் வெங்காயம் மற்றும் சம்பங்கி பயிரில் அமைக்கப்பட்டுள்ள சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனக் கருவிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியரிடம் சம்பங்கி மலர் சாகுபடியின் மூலம் தான் சிறந்த பலனைடைந்ததாக விவசாயி தெரிவித்தார்.

நன்னை கிராமத்தில் சிவசக்திவேல் என்ற விவசாயி வயலில் ரூ. 80,500- மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பண்ணையத்தை பார்வையிட்டார்.

விவசாயி ஆடு, மாடு, கோழி, பயோகேஸ், மண் புழு உரம், தீவனப்பயிர் சாகுபடி ஆகியவற்றை ஒருங்கிணைத்து செய்து வருவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்து இதன் மூலம் பெறும் பயன்கள் குறித்தும் விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) ராஜசேகரன், தோட்டக் கலைத் துறை துணை இயக்குநர் இந்திரா, நீர்வள மேம்பாட்டு முகமை துணை இயக்குநர் அண்ணாதுரை உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!