In Perambalur, Collector Venkatapriya provided welfare assistance to unorganized workers

பெரம்பலூர் கலெக்டர் ஆபிசில், தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், கலெக்டர் வெங்கடபிரியா தலைமையேற்று 1,050 பயனாளிகளுக்கு ரூ.21.85 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி.ராஜேந்திரன், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சரால் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழகம் முழுவதும் 50,721 தொழிலாளர்களுக்கு ரூ.12 கோடியே 35 லட்சத்து 20 ஆயிரத்து 950 திற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் 934 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கல்விக்கும் , 2 பயனாளிகளுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பீட்டில் திருமணத்திற்கும், பயனாளி ஒருவருக்கு ரூ.500 மதிப்பீட்டில் கண் கண்ணாடிக்கும், 12 பயனாளிகளுக்கு ரூ.3,00,000 மதிப்பீட்டில் இயற்கை மரணத்திற்கும், பயனாளி ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் விபத்து மரணத்திற்கும், 100 பயனாளிகளுக்கு தலா ஆயிரம் ஓய்வூதிய உதவி தொகைகள் என மொத்தம் 1,050 பயனாளிகளுக்கு ரூ.21,85,500 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

டி.ஆர்.ஓ., அங்கையற்கண்ணி, தொழிலாளர் உதவி ஆணையாளர்கள் ஜெ.எ.முஹம்மது யூசுப், மு.பாஸ்கரன், கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல்வேறு அரசு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

படவிளக்கம்:

பெரம்பலூரில் கலெக்டர் வெங்கடபிரியா, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது எடுத்தப் படம். மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி.ராஜேந்திரன், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!