In Perambalur county voter list: total 5,29,009 voters in the two Assembly constituencies

voter-list-issueபெரம்பலூர் மாவட்ட ஆட்சியர அலுவலக வளாகத்தில இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை அரசு பணியாளர்கள் இன்று வெளியிட்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஏப்.29 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 2,78,389 வாக்காளர்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2,55,726 வாக்காளர்களும் என மொத்தம் 5,34,115 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

அதன் பின்னர் நடைபெற்ற தொடர் திருத்த பணியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களின் பேரில் 393 ஆண் வாக்காளர்களும், 364 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 757 வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டனர்.

இறப்பு, இரட்டை பதிவு மற்றும் இடப்பெயற்சி காரணமாக பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 1,733 ஆண் வாக்காளர்களும், 1,555 பெண் வாக்காளர்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 1,237 ஆண் வாக்காளர்களும், 1,338 பெண் வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டனர்.

தற்போது வெளியிடப்பட்ட பட்டியலின் படி பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் இருந்த இரண்டு துணை வாக்கு சாவடிகள் இந்திய தேர்தல் ஆணைய உத்தரவு படி (பாப்பாங்கரை (எசனை) மற்றும் கவுள்பாளையம் வாக்குச்சாவடிகள்) முதன்மை வாக்கு சாவடிகளாக மாற்றம் செய்யப்பட்டு தற்போது 322 வாக்குசாவடிகள் உள்ளன.

இந்த 322 வாக்கு சாவடிகளில் 1,34,475 ஆண் வாக்காளர்களும், 1,41,000 பெண் வாக்காளர்களும் இதர 14 வாக்காளர்களும் என மொத்தம் 2,75,489 வாக்காளர்கள் உள்ளனர். குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 316 வாக்குசாவடிகளில் 1,26,012 ஆண் வாக்காளர்களும், 1,27,497 பெண் வாக்காளர்களும் இதர 11 வாக்காளர்களும் என மொத்தம் 2,53,520 வாக்காளர்கள் உள்ளனர்.

ஆக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் 2,60,487 ஆண் வாக்காளர்களும், 2,68,497 பெண் வாக்காளர்களும், இதர 25 வாக்காளர்களும் என மொத்தம் 5,29,009 வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணி 2017 – ஐ முன்னிட்டு வருகின்ற 11.09.2016 மற்றும் 25.09.2016 ஆகிய இரண்டு நாட்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

01.01.2017 அன்று 18 வயது பூர்த்தி ஆகும் நபர்கள் தங்களது பெயரை பதிவு செய்ய தக்க ஆவணங்களுடன் நியமனம் செய்யப்பட்ட வாக்கு சாவடி மையங்களில் 01.09.2016 முதல் 30.09.2016 வரை அனைத்து வேலை நாட்களில் விண்ணப்பிக்கலாம், என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரநிதிகள், வட்டாட்சியர்கள் பாலகிருஷ்ணன்(பெரம்பலூர்), அமுதா(செந்துறை), செல்வராஜ்(தேர்தல்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!