In Perambalur debt problem at the death of the young men set themselves on fire
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அசூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் முத்துசாமி (26) மரம் வியாபாரி . முத்துசாமிக்கு அதிக கடன் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி தருமாறு கேட்டு உள்ளனர்.
இதனால் மனமுடைந்த முத்துசாமி கடந்த 21-ந் தேதி தனது வீட்டில் யாரும் இல்லாத போது உடலில் மண்ணென்னை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயை அனைத்து சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த முத்துசாமி இன்று மாலை சிகிச்சையின் பலன் அளிக்காததால் இறந்தார்.
இது குறித்து முத்துசாமியின் தந்தை பெரியசாமி குன்னம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்புசெல்வன் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.