In Perambalur district, 161 places, 16th phase of Corana vaccination camp: Collector Venkatapriya Information!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் 161 சிறப்பு தடுப்பூசி மையங்களில் 16ம் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நாளை ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற உள்ளது. இம்முகாம்களில் 20 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 29 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 அரசு மருத்துவமனைகள், 128 மற்ற இடங்கள் என மொத்தம் 161 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் வட்டாரத்தில் 40 தடுப்பூசி மையங்களும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 41 தடுப்பூசி மையங்களும், ஆலத்தூர் வட்டாரத்தில் 37 தடுப்பூசி மையங்களும், குன்னம் வட்டாரத்தில் 43 தடுப்பூசி மையங்களும் என மொத்தம் 161 சிறப்பு தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுசுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 500 க்கும் மேற்பட்ட நபர்கள் மக்களை ஒருங்கிணைத்து தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு வீட்டிலும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு இரண்டாம் தவணைக்கு உள்ளவர்களும் தாமே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டு நமது மாவட்டத்தை கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்றும் வண்ணம் முனைப்புடன் செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.