In Perambalur district, for fake jewelery, mortgage loans from co-operative banks; Government discount came!

கூட்டுறவு வங்கி என்பது ஆளும், எதிர்கட்சி மற்றும் கூட்டணி கட்சியினருக்காக உருவாக்கப்பட்டது போல் ஆகிவிட்டது. அரசியல்வாதிகளின் ஆதரவாளர்கள், கட்சியினருக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கடன் கொடுக்கப்படுகிறது. இதே போல் அதிகாரிகளும் தங்கள் சமூகத்தினருக்கும், வேண்டப்பட்டவர்களுக்கும், கடன் வழங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கூட்டுறவு வங்கிகளில் சாமானிய மக்கள் கடன் பெறுவதற்கு அலைகழிப்பதோடு, கடன் கொடுக்க மறுத்து அனுப்பவும் செய்கின்றனர். இந்நிலையில் கடந்த தேர்தலில், திமுக, அதிமுக இரு கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு நகைக்கடன் தள்ளுபடி அறிவித்த நிலையில் அறிவித்த தேதி வரை கூட்டுறவு வங்கி பணியாளர்கள், அரசியல்வாதிகள் போட்டி போட்டுக் கொண்டு தள்ளுபடியை எதிர்நோக்கி நகைகளை பின்தேதியிட்டு அடகு வைத்து செட்டப் செய்தனர். அதில் ஆயிரகணக்கானோருக்கு தள்ளுபடியும் கிடைத்துள்ளது.

ஆனால், தற்போது திமுக அரசு, தள்ளுபடி பெற்ற நகைக்கடன்தாரர்களை ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட போலி தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. அந்த நகைகள் கடன் தள்ளுபடி லிஸ்ட்டில் இருக்கிறது. இதனை மூடி மறைத்து வரும், அதிகாரிகள் மாட்டிக் கொள்ளமால் இருக்க கடும் முயற்சி எடுத்து வருகின்றனர். மற்றொரு புறம், அவசரகதியில் நகைகள் இரவோடு இரவாக வைக்கப்பட்ட பல நகைகள் போலி என தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த நாட்டில் ஒரு பக்கம், குடிக்க பால் இல்லாமல் இருக்கும் குழந்தைகள் ஒருபுறம், உண்ண உணவு உடுக்க உடை கிடைக்காமல் அலையும் ஒரு பகுதியினர் ஒருபுறம், படிக்க முடியாமல் ஏங்கித் தவிக்கும் மாணவர்கள் ஒருபுறம், நோய்க்கு உரிய சிகிச்சை பெற கட்டணம் செலுத்த முடியாதவர்கள் ஒருபுறம், வேலைகிடைக்காமல் வீதிகளில் அலையும் இளைஞர்கள் ஒரு புறம் என, காலம் முழுவதும் உழைத்து ஓடாய் தேய்ந்தவர்கள், கடைசி காலத்தில் கால் வயிறு கஞ்சி கூட குடிக்க முடியாமல் முதுமையில் வறுமையில் வாடுவோர்கள் ஒரு புறம், தனியார் வங்கிகளில் கடன் பெற்று வட்டி கட்டமுடியாமல் வாடுவோர்கள் என இந்த சமூகம் பல்வேறு நிலைகளை கொண்டுள்ளது.

சுகந்திரம், பெற்று 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் பல தலைமுறையினர் அடிப்படை வசதிகளை கூட தொட முடியாமல் 10க்கு பத்து வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். ஆனால், அரசியல்வாதிகள் வருமானத்திற்கு சொத்து சேர்த்து வழக்குகளில் அலைவதுதான் இந்த நாட்டின் சாபக்கேடு.

அரசியல்வாதிகளின் கைப்பாவையாக செயல்படும் கூட்டுறவு வங்கிகளின் செயல்பட்டை வெளிப்படைத்தன்மையாக நடத்துவதன் மூலம் மட்டுமே முறைகேடுகளையும், ஊழல்களை ஒழிப்பதோடு, சாமானிய மக்கள் முன்னேற ஒரு சாதனமாக அமையும்.

போலி நகைகளுக்கும், தகுதி இல்லாதவர்களும் கடன் பெற்று தள்ளுபடி வந்துள்ள சம்பவம் தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. யாரை யார் காப்பாற்றிக் கொள்வது என்ற போட்டியில் ஒருவர் மீது ஒருவர் பழி போட்டுக் கொண்டுள்னர். அப்ரேசர்கள், கூட்டுறவு பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது கூட்டுறவுத் துறையில் நடந்துள்ளது சின்ன சாம்பிள் மட்டுமே!. இதே போன்று மாவட்டத்தின் பிற துறைகளிலும், ஆய்வு செய்தால் பல முறைகேடுகள், ஊழல்கள் வெளிச்சத்திற்கு வரும். நகைக்கடன் தள்ளுபடி பெற்ற ஏழைகளின் பட்டியலை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூட்டுறவு வங்களில் பணிபுரிவோர்களை கூண்டோடு வெவ்வேறு மாவட்டங்களுக்கு மாற்ற வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!