in Perambalur District Government, which demonstrated creativity, painting, drawing competition for school students
பெரம்பலூர் மாவட்டத்தில், அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் ஓவியம் வரையும் போட்டி இன்று அனைத்து பள்ளிகளிலும்நடைபெற்றது.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற இப்போட்டியில், பள்ளி வளாக சுற்றுச்சுவர்கள் மற்றும் வகுப்பறை சுவர்களை சுத்தம் செய்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 60 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், 46 அரசு உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் 39 அரசு மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 145 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் ஓவியங்களை தீட்டினர்.
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு, இயற்கை பேரிடர், மின்சார சேமிப்பு, தேச தலைவர்கள், இலக்கிய நீதிக்கதைகள், நுகர்வோர் விழிப்புணர்வு, சுற்றுசூழல் பாதுகாப்பு, பெரம்பலூர் மாவட்ட சுற்றுலாத்தலங்கள், புவி வெப்பமயமாதல், வரலாற்றுச் சுவடுகள், பாரம்பரிய கலைகள், கல்வியின் முக்கியத்துவம், வளரிளம் பருவம், தூய்மை பாரதம், நிலத்தடி நீர் சேமிப்பு, மாற்று எரிசக்தி, வனவிலங்கு பாதுகாப்பு, தண்ணீர் சேமிப்பும் எதிர்காலமும், சாலை பாதுகாப்பு, ரத்ததானம், தேசிய சின்னங்கள், அறிவியல் விஞ்ஞானிகள், இயற்கை காட்சிகள், கவிஞர்கள், சமூக ஒற்றுமை, தலை கவசம் உயிர் கவசம், தன் சுகாதாரம் பேணல் உள்ளிட்ட 28 தலைப்புகளின் கீழ் ஓவியங்கள் வரையப்பட்டன.
அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் படைபாற்றல் திறனை அதிகப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, அனைத்து அரசுப்பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள் ஓவியம் வரையும் நிகழ்ச்சிகளை கண்காணிக்கவும், மாணவ, மாணவிகளால் வரையப்படும் சிறந்த ஓவியங்களை தேர்ந்தெடுக்கும் வகையிலும் வருவாய்துறை, வளர்ச்சித்துறை மற்றும் கல்வித்துறை சார்ந்த அலுவலர்களை கொண்டு கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு சிறந்து ஓவியங்களுக்கு பரிசுகளும் வழங்கபட உள்ளது.