In Perambalur district, house, grocery store doors were broken into and Rs 3.25 lakh, 5 pound robbery!

பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு கொள்ளை சம்பவங்களில், கொள்ளையர்கள் மளிகை கடை மற்றும் வீட்டின் கதவை உடைத்து, ரூ. 3 லட்சத்து 25 ஆயிரம் ரொக்கம், 5 பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் , பாடாலூர் அருகே உள்ள இரூர் கிராமத்தைச் சேர்ந்த நடசேன் மகன் சதீஷ்குமார் (35) நேற்று மாலை வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் அதே கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று விட்டு இரவு 9.30 மணியளவில் திரும்ப வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. வீட்டினுள் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த ரொக்கம் ரூ .3 லட்சம் மற்றும் 5 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பாடாலூர் போலீசார் சம்பவ இடம் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர், கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்து, அவர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


பெரம்பலூர் 4 ரோடு அருகே உள்ள கார்த்திக் பெட்ரோல் பங்க் பக்கத்தில், துறைமங்கலம், அவ்வையார் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் மணிகண்டன் (26), பெட்டி கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு 9 மணி அளவில் தனது மளிகை கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இன்று காலை 7.30 மணி அளவில் கடையை திறக்க வந்து பார்த்த போது கடையின் ஒரு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததாகவும், உள்ளே இருந்த ரொக்கம் 25 ஆயிரத்தை எடுத்து சென்றதோடு, கல்லா பெட்டியில் இருந்த கணக்கு நோட்டுகளை வெளியில் வீசிவிட்டு சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், மோப்பநாய் பிரிவு மற்றும் விரல் ரேகை பதிவு பதிவு பிரிவு துறையினர் வரவழைக்கப்பட்டு, தடயங்களை வைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நேற்று ஆயுத பூஜை நடந்த நிலையில் கொள்ளை போன சம்பவம் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!