In Perambalur district Sillakkudi village panchayat meeting in the Independence Day – Participation collector

gramma-sabha பெரம்பலூர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தையொட்டி 121 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் இன்று நடந்தது.

ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சில்லக்குடியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் பங்கேற்றார்.

இக்கூட்டத்தில் சில்லக்குடி ஊராட்சியில் கிராம ஊராட்சியின் பொது நிதியில் இருந்து செய்யப்பட்ட குடிநீர் வசதிக்கான செலவினங்கள் – கைப்பம்பு, விசைப்பம்பு மற்றும் மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் பராமரிப்புச் செலவின விவரங்கள், மின்சார வசதிக்கான செலவினங்கள், பொது நிதியில் எடுக்கப்பட்ட மூலதனப் பணிகள் அதன் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும், 2016-17 ஆம் நிதி ஆண்டில் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்படவிருக்கும் ஊராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கான திட்ட அறிக்கையினை கிராம சபை கூட்டத்தின் முன் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது.

தனிநபர் இல்லக் கழிப்பறை கட்ட தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு ரூ.12,000- மானியம் அரசு திட்டங்களின் மூலம் வழங்கப்படுவது குறித்து பொது மக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

கிராம ஊராட்சியில் நடத்தப்பட்ட சுகாதார அடிப்படைக் கணக்கெடுப்பின்படி கழிப்பறை இல்லாத வீடுகளில் குடியிருக்கும் மற்றும் தற்போது வரை கழிப்பறை கட்டாமல் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நபர்களின் பெயர்களை கிராம சபையில் வாசிக்கப்பட்து.

ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஆண்கள் சுகாதார வளாகங்கள் பராமரிப்பு மற்றும் அவற்றின் தொடர் செயல்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது.

கிராம ஊராட்சியில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் கழிப்பறைகள் கட்டப்பட்டு பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிக் கழிப்பறைகளை தூய்மையாக பராமரித்திட, கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் ஈடுப்படுத்தப்பட்ட பகுதி நேர துப்புரவுப் பணியாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளில் 150 குடும்பங்களுக்கு ஒரு பணியாளர் என்ற வகையில் ‘தூய்மை காவலர்கள்’ ஈடுபடுத்தப்பட்டுள்ளதையும், தெருக்கள்தோறும் குப்பை சேகரிக்கப்படும் நேரம் மற்றும் தூய்மை காவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட தெருக்கள் விவரத்தையும், தெருக்கள்தோறும் குப்பைகளை சேகரிக்க வரும் தூய்மை காவலர்களுக்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாகப் பிரித்து கொடுப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக எடுத்து கூறப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்ப்பட்ட சில்லக்குடி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் அமுதசுரபி நிதியிலிருந்து 5 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.4,20,000 மதிப்பிலான கடனு உதவிக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பிரநிதிகளின் செயல்பாடுகள் குறித்தும், தமிழக அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களை சென்று சேர்ந்திருப்பதன் விபரங்கள் குறித்தும் பொதுமக்களுடன் நேரடியாக கேட்டுதெரிந்துகொள்வதற்காகவே இந்த கிராமசபைகூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இக்கூட்டங்கள் இக்கூட்டங்களில் அரசு செயல்படுத்திவரும் திட்டங்களின் வெளிப்படை தன்மை குறித்தும், அத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், அதனால் அவர;கள் பெற்ற முன்னேற்றங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும்.

மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சுகாதாரத்தை முழுமையாக கடைபிடிக்கும் வகையில் அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பறை அமைக்க வேண்டும். இதன் மூலம் பல நோய்கள் ஏற்படா வண்ணம தவிர்க்க முடியும். மேலும் தனியார் நிலங்களில் மரங்கள் வளர்க்க விரும்பும் பொதுமக்களின் நிலங்களின் நிலங்களின் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக கன்றுகள் நடப்பட்டு, பராமரித்து கொடுக்கப்படும். எனவே மரம் வளர்க்க ஆர்வமுள்ள விவசாயிகள் தங்கள் பெயர்களை வேளாண் துறையின் மூலம் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்தவர்களின் நிலங்களில் இன்னும் ஓரிரு மாதங்களில் மரக்கன்றுகள் நட்டு கொடுக்கப்படும், என பேசினார்.

அதனை தொடர்ந்து தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர், பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை ஊர் பொதுமக்களிடம் தனித்தனியாக கேட்டறிந்தார்.

இதற்கு முன்பாக சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவு உண்டார்.

இக்கூட்டத்தில் உதவி இயக்குநர் (ஊராட்சி தணிக்கை) பி.அவநாசிலிங்கம், ஆலத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் வெண்ணிலாராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனிச்சாமி, மணிவாசகன், வட்டாட்சியர் சீனிவாசன், சில்லுக்குடி ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!