In Perambalur district, the first review meeting with panchayat leaders to improve the protection of public open areas!

பெரம்பலூர் கலெக்டர் ஆபீசில், ஊராட்சிப் பகுதிகளில் உள்ள பொது திறவிடப் பகுதிகளை (OSR Land) பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் குறித்து 121 கிராம ஊராட்சித் தலைவர்களுடனான முதல்நிலை ஆய்வுக் கூட்டம் கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் நடைபெற்றது.

ஊரக உள்ளாட்சி நிர்வாகத்திற்குட்பட்ட 121 கிராம ஊராட்சிப் பகுதிகளில் பொது திறவிடப் பகுதி (OSR Land)-ஐ பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் குறித்து, வருவாய் துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பத்திர பதிவுத்துறை அலுவலர்கள், கிராம ஊராட்சித்தலைவர்கள் அடங்கிய குழு அமைத்து கிராமப் பகுதிகளில் உள்ள பொது திறவிடப் பகுதி (OSR Land)-ஐ பாதுகாப்பது குறித்து முதல்நிலை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஒரு மனைப் பிரிவில் அமையப் பெற்றுள்ள பொது திறவிடப் பகுதி மற்றும் சாலைக்கான இடத்தினை பாதுகாப்பது தொடர்பாக பொது திறவிடப் பகுதி, ஒன்றிய அளவில் பதிவேடு பராமரித்தல், பொது திறவிடப் பகுதிகளுக்கான ஆவணங்கள் பெறுதல், விடுபட்ட ஆவணங்கள் சார்பதிவாளரிடம் பெறுதல், தானப் பத்திரம் விவரம் பதிவேட்டில் பராமரித்தல், பட்டா மாற்றம் மற்றும் பணிகளை முடிக்க வேண்டிய கால அட்டவணை ஆகிய தலைப்பில் விரிவான முறையில் நிலையான ஆலேசாசனைகள் வழங்கப்பட்டது, இக்கூட்டத்தில் டி.ஆர்.ஓ. அங்கையற்கண்ணி, பி.டி. லலிதா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிதாசன் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!