In Perambalur, DMDK party members pulled the Golden Chariot at the Siruvachur Madhurakaliamman Temple to celebrate L.K. Sudhish becoming an MP and to mark the birthday of DMDK General Secretary Premalatha.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டும், அக்கட்சியை சேர்ந்த எல்.கே சுதீஷ் எம்.பி ஆனதற்கும், பெரம்பலூர் மாவட்ம் சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் கோயிலில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை சிவா ஐயப்பன் தலைமையில், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் ஏ. ஆனந்தராஜ் ஏற்பாட்டில் தேமுதிகவினர் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர், தங்கத்தேர் இழுத்து கோயில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து, தேர், நிலை நின்ற உடன் அங்கிருந்த பக்தர்களுக்கு அன்னதானம் செய்தனர். ஒன்றிய செயலாளர்கள் பெரம்பலூர் இளையராஜா, ஆலத்தூர் விஜயகுமார், ஜெயவேல் கனகராஜ், , ஒன்றிய துணை செயலாளர் வடிவேல், சத்தியமூர்த்தி, வேல்முருகன், நடராஜன், சிறுவாச்சூர் கிளை செயலாளர் சபரி, உதவி பேராசிரியரும், மாவட்ட மாணவரணி செயலாளருமான செந்தில்குமரன், கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497