In Perambalur extortion betrayed by the knife blockage in prison
பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் அழகிரி (வயது 32). இவர் நேற்றிரவு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த போது திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்த ஜேம்ஸ் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 500-யை பறித்து கொண்டார்.
உடனடியாக தனது நண்பர்கள் மூலம் வளைத்து பிடித்த ஜேம்ஸ் பெரம்பலூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் அழகிரியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட அழகிரி மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.