In Perambalur hacked to barrage at the meat shop owner! Unidentified persons outbreaks Action !!
பெரம்பலூர் அருகே இறைச்சி கடை உரிமையாளர் சரமாரியாக வெட்டிக் கொலை! மர்ம நபர்கள் வெறிச் செயல்!!
பெரம்பலூர் அருகே கோனேரிப்பாளையம் புறவழிச்சாலை அருகே வடக்கு மாதவி செல்லும் சாலையில் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதாக பெரம்பலூர் போலீசாருக்கு வந்த தகவல் வந்தது.
அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், பெரம்பலூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரெங்கசாமி மகன் குமார் (வயது – 44). திருநகரில் இறைச்சி கடை நடத்தி வருகிறார் என்பது தெரிய வந்தது.
இந்நிலையில், இவரை மர்ம நபர்கள் சிலர் அழைத்து சென்று அப்பகுதியில் கொலை செய்துள்ளனர். இது குறித்து பெரம்பலூர் போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.