In Perambalur Haning in suicide at the young man!
பெரம்பலூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்டவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 37) விவசாய கூலித்தொழிலாளி, இவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு சாந்தா (30) என்ற மனைவியும் சத்தியநாதன் (3) என்ற மகனும், சசிதரா (1) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று கொளத்தூர் கிராமத்தில் தோப்படி கோயில் பகுதியில் உள்ள மரத்தில் சங்கர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை அறிந்த அப்பகுதி மக்கள் சங்கரின் மனைவி சாந்தாவிடம் தகவல் தெரிவித்தார்கள். சாந்தா கொடுத்த தகவலின் பேரில் மருவத்தூர் போலீசார் எஸ்.ஐ., மாரிமுத்து சம்பவ இடத்திற்கு சென்று சங்கரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கா பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து சாவுக்கான காரணம் என்ன? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்ஃ
தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சங்கர், ஏற்கனவே இரு முறை தற்கொலைக்கு முன்றவர் என்பது குறிப்பிடதக்கது.