In Perambalur happening tomorrow in the Guinness World Record of 16,000 students participating.

rotary-perambalur பெரம்பலூரில் தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்விக் குழுமம் மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணா, ஸ்ரீசாரதா கல்விக் குழுமம், கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி, ரோட்டரி 300-வது மாவட்டம், பெரம்பலூர் இளம் தலைமுறை ரோட்டரி சங்கம் சார்பில் உங்களால் முடியும்.. (யூ கேன்.. யூ வில்) என்ற தன்னம்பிக்கை வாசகத்தை 16ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ-மாணவிகளால் 182மீ நீளம், 60 மீ அகலத்திற்கு வடிவமைத்து நின்று உலக கின்னஸ் சாதனை மற்றும் இந்திய சாதனைகள் புத்தகத்தில் பதிவு செய்யும் நிகழ்ச்சி நாளை ( புதன்கிழமை) காலை 9 மணிமுதல் 11.30மணிவரை நடக்கிறது.

ரோவர் என்ஜினியரிங் கல்லூரி மைதானத்தில் நடக்கும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல்சந்திரா தொடங்கி வைக்கிறார். இதில் மாவட்ட ரோட்டரி ஆளுனர் முருகானந்தம், வருங்காலஆளுனர்கள் கோபால கிருஷ்ணன்(தேர்வு), கண்ணன் (நியமனம்), ரோட்டரி சிறப்பு திட்ட இயக்குனர் ஆனந்தஜோதி, ரோவர் குழுமத் தலைவர் வரதராஜன், ஸ்ரீராமகிருஷ்ணா கல்விக்குழும தலைவசிவசுப்ரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனா;

இந்த தகவலை கின்னஸ் சாதனை திட்ட தலைவரும், ரோவர் குழுமத்தின் துணைத் தலைவருமான ஜான் அசோக் வரதராஜன், செயலாளர் விவேகானந்தன், இளம்தலைமுறை ரோட்டரி சங்க நிர்வாகிகள் பேராசிரியர் மகேந்திரன், சிங்காரம் ஆகியோர் நிருபர்களிடம் தெரிவித்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!