In Perambalur Holy of Mata Church’s annual ice festival was held to mark the chariot procession yesterday night the outfit. Today the festival is held.
பெரம்பலூர் சங்கு பேட்டைக்கும் கடைவீதிக்கும் இடையே உள்ள புனித பனிமைய மாதா கோயில் ஆண்டுப் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 5ம் தேதி அந்த சர்ச்சை சேர்ந்த கிறித்தவர்கள் ஆண்டுப் பெருவிழா கொண்டாடி வருகிறார்கள்.
இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு கடந்த 27ம் தேதி மாலை பெரம்பலூர் வட்டார முதன்மை ஆயர் அடைக்கலசாமி தலைமையில் துவங்கிய விழாவை, கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை ஆயர் அமிர்தசாமி கொடி ஏற்றி வைத்து, சிறப்புத் திருப்பலியை நடத்தினார்.
நேற்று மாலை கோட்டாறு மறை மா வட்ட ஆயர் பீட் டர் ரெமிஜியஸ் தலைமையில் கூட்டுப் பாடல் திருப்பலியும், இரவு சப்பர ஊர்வலம் நடை பெற் றது.
இதில் பெரம்பலூர் வட்டார பாதிரியார்கள், சர்ச் நிர்வாக குழுவினர் மற்றும், பொது மக்கள் கலந்து கொண்டனர். இன்று குரும்பலூர் – பாளையம் சர்ச் பாதிரியார் சேவியர் தலைமையில் திருவிழா (மாஸ்) சிறப்புப் பாடல் திருப்பலியும், பின்னர் கொடியிறக்கமும் நடக்க உள்ளது.