In Perambalur, hotels switched to supply in the name of order due to low traffic!

தற்போது ஏற்பட்டுள் கொரோனோ வைரஸ் தொற்றில், இருந்து மக்களை காக்கும் பொருட்டு, அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், போக்குவரத்து, பள்ளி, மற்றும் பல பகுதிகளில் நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பித்த வேளையில், பல்வேறு மாற்றங்கள் மக்கள் இயல்பு வாழ்க்கையில் ஏற்பபட்டுள்ளது.

ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளை தளர்த்திய நிலையில், உணவகங்களும் திறக்கப்பட்டன. பேருந்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மக்கள் வருகை பெரம்பலூர் நகருக்கு வெகுவாக குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது. அதனால், பல ஹோட்டல்களில் முழுசாப்பாடு தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட அளவிற்கு விற்பனை எட்டாததால், சாதம், கூட்டு, பொறியல், சாம்பார், புளிக்குழம்பு, ரசம், மோர், போன்றவற்றை தயாரிக்க அதிக ஆட்கள் தேவைப்படுவதாலும், முழு சாப்பாடு விற்பனை மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து, சாப்பாடும் பரிமாறப்பட்டு வந்தது. ஆனால், விற்பனை கட்டுப்படியாகதால், சில ஹோட்டல் காலவரையின்றி மூடப்பட்டது. ஊழியர்களுக்கும் விடுப்பும் அளிக்கப்பட்ட நிலையில், சில கடைகள் இயங்கி வந்தன. அவற்றிலும், தற்போது விற்பனை லாபகரமாக இல்லாமல், முதலாளிகளுக்கு கையை கடித்தால் பல முழு சாப்பாட்டை குறைத்து, சப்பாத்தி, பரோட்டா, தக்காளி, தயிர், எலுமிச்சை, புளி சாதங்களுக்கு மாறினர்.ஆனாலும், அவைகளும் கை கொடுக்கதாதால், சில ஹோட்டல்கள் ஆர்டரின் பேரில் தயாரித்து கொடுக்க தொடங்கிவிட்டனர். இதனால், மின்சாரம், உள்ளிட்ட பல்வேறு செலவுகள் குறையும், அதோடு, தேவைக்கு மட்டும் சமைத்து விற்பனை செய்து கொள்ள முடியும். பொருட்களும் பெருமளவில் வீணாவது தடுக்க முடியும் என்பதால் பல கடைகள் செல்போன் எண்ணை கொடுத்து முன்கூட்டிய ஆர்களுக்கு மாறிவிட்டது. கொரோனாவிற்கு ஏற்ப வணிகர்களும் தங்களை மாற்றிக் கொண்டு வருகின்றனர். போக்குவரத்து சீரடைந்து மக்கள் வந்தால் மட்டுமே வணிகம் இயல்பு நிலைக்கு மாறும் என வியாபாரிகள், பல இழப்புகளுடன் காத்து கொண்டு உள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!