In Perambalur In the meeting of Ganesh Chaturthi, conducted on behalf of the police.
பெரம்பலூரில் இன்று காலை 11 மணி அளிவல் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பாக பெரம்பலூர் துறைமங்களத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சோனல் சந்திரா தலைமையில், பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவது தொடர்பான பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் இருந்து விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தும் விழா கமிட்டி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் விநாயகர் சிலை வைத்தல், ஊர்வலம் மற்றும் கரைத்தல் தொடர்பான அனைத்து விதமாக பாதுகாப்பு நடவழக்கைகள் மற்றும் வழிக்காட்டுதல் எடுத்துரைக்கப்பட்டது.
இதில் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஞா.சிவக்குமார், வருவாய் துறையினர், காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துறை ஆய்வாளர்கள், காவல் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.