In Perambalur locked in houses in the city of a lakh worth of products, including gold, silver theft
பெரம்பலூரில் பூட்டியிருந்த வீடுகளில் அடுத்தடுத்து பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகை, வெள்ளி கொலுசு மற்றும் 7 ஆயிரத்து 500 ரூபாய் திருட்டு
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட சங்குபேட்டை ராதாகிருஷ்ணன் நகரில் வசிக்கும் பழனி- தனம் தம்பதியினர் மற்றும் பாஸ்கர் – செல்வி தம்பதியினர் தங்களின் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டினுள் பீரோவில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகை, வெள்ளி கொலுசு மற்றும் 7 ஆயிரத்து 500 ரூபாயை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது, இதனால் அதிர்ச்சியடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் தடய அறிவியியல் நிபுணர்கள் மற்றும் துப்பறியும் நாயுடன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து, தடயங்களை சேகரித்து, வழக்கு பதிந்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பூட்டியிருந்த வீடுகளில் அடுத்தடுத்து பூட்டை உடைத்து, தங்க நகை மற்றும் ரொக்க பணம் திருடு போன சம்பவம் அப்பகுதி குடியிருப்பு வாசிகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.