In Perambalur moderate rainfall in various places in the district today!
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று மாலை மழை பெய்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பூர், குன்னம், வேப்பந்தட்டை எசனை, பாடாலூர், செட்டிக்குளம், அரும்பாவூர் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்தது. இதனால், மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், பருத்தி, பயிறுவகைகள், தீவனம், ஆமணக்கு போன்றவற்றை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குளிர்ந்த காற்றும் வீசுவதால் இதமான தட்ப வெப்பநிலை பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் வெப்பத்தில் இருந்தும் கொசுத் தொல்லையில் இருந்தும் சற்று விடுதலை கிடைத்துள்ளது.