in perambalur near kadur Sri Padaikattavar special pooja in the temple in the temple in honor dark moon
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே காடூர் கிராமத்திலுள்ள ஸ்ரீபடைகாத்தவர் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.
குன்னம் அருகே காடூர் கிராமத்திலுள்ள மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீபடைகாத்தவர் பூரண, பொற்கலை கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்றும் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
இதன்படி நேற்று இரவு அமாவாசையையொட்டி ஸ்ரீபடைகாத்தவர் பூரண, பொற்கலைக்கு அபிஷேகம், அலங்காரம் ஆராதணைமற்றும் சிறப்பு பூகைள் நடைபெற்றது. இந்த நிகச்சியில் காடூர், புதுவேட்டக்குடி, நல்லறிக்கை, கொளப்பாடி, துணிச்சப்பாடி, கோவில்பாளையம், நம்மகோணம், துங்கபுரம், வயலூர், கீழப்பெரம்பலூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் தங்களின் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. அமாவாசை சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தாக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.