in Perambalur near the snake bite woman died
பெரம்பலூர் அருகே பாம்பு கடித்ததில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், பெரியம்மாபாளையம் கிராமம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் யூசூப் மனைவி மூன்ஷாபீ (வயது 70), இவர் நேற்றிரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். சுமார் இரவு 11.30 மணி அளவில் மூன்சாபியை பாம்பு கடித்தது. வலி தாங்க முடியாமல் அலறினார். அப்போது ஓட்டு வீட்டின் விட்டத்தில் பாம்பு தப்பித்து சென்றதை அங்குவந்த பொது மக்கள் பார்த்துள்ளனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் முதலுதவி செய்து முன்சாபீயை கிருஷ்ணாபுரம் வட்டார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் உயிரிழந்தார். இது குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.